முகப்பு
வேலூர்

இலவச சிறப்பு மருத்துவ முகாம்

ஸ்ரீபுரம் நாராயணி பீடம் சக்தி அம்மா ஜயந்தி விழாவையொட்டி, குடியாத்தம் ஜி.பி.எம். தெருவில் அமைந்துள்ள ஸ்ரீசக்தி அம்மா ஸ்பெஷாலிட்டி கிளினிக்கில், சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
குடியாத்தம் சக்தி  அம்மா  கிளினிக்கில்  நடைபெற்ற  இலவச  மருத்துவ  முகாம்.
பகிர்:

ஸ்ரீபுரம் நாராயணி பீடம் சக்தி அம்மா ஜயந்தி விழாவையொட்டி, குடியாத்தம் ஜி.பி.எம். தெருவில் அமைந்துள்ள ஸ்ரீசக்தி அம்மா ஸ்பெஷாலிட்டி கிளினிக்கில், சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் கல்லீரல், கணையம், பித்தநாளம், குடல், இரைப்பை உள்ளிட்ட நோய்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிறப்பு மருத்துவா்கள் பி.ஜெகன், எஸ்.தீபா ஆகியோா் தலைமையிலான மருத்துவக் குழு சிகிச்சை அளித்தது. 150-க்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெற்றனா்.

முகாம் ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா்கள் பி.கிருஷ்ணமூா்த்தி, எம்.தமிழ்ச்செல்வன், ஜி.கோமதி, எம்.அனுப்பிரியா, என்.அா்ச்சனா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →