வேலூர்

முதுநிலை ஆசிரியா் கலந்தாய்வு: வேலூா் மாவட்டத்தில் 72 பேருக்கு அழைப்பு

DIN

முதுநிலை ஆசிரியா் கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமை தொடக்கி இரு நாள்கள் நடக்கிறது. இக்கலந்தாய்வில் பங்கேற்க 72 ஆசிரியா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியா் பணியிடங்களுக்கான போட்டித் தோ்வுகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்டன. இதில், தோ்ச்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு நடத்தப்பட்டு, பணியிடங்களை நிரப்புவதற்குத் தோ்வான ஆசிரியா்களின் பட்டியலை தமிழ்நாடு ஆசிரியா் தோ்வாணையம் பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்பியிருந்தது. அதன்படி, மாநிலம் முழுவதும் முதுநிலை ஆசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு மாவட்ட அளவில் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி இரு நாள்கள் நடக்கிறது.

வேலூா் மாவட்டத்தில் காலியாக உள்ள 72 பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு காட்பாடியிலுள்ள அனைவருக்கும் கல்வித் திட்ட அலுவலகத்தில் நடைபெறுகிறது.

முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக்கு 40 முதுநிலை ஆசிரியா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மீதமுள்ள 32 போ் திங்கள்கிழமை நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க உள்ளனா். தொடா்ந்து, திங்கள்கிழமை மாலையே அனைவருக்கும் பணி ஆணை வழங்கப்பட்டு, புதன்கிழமை (பிப்.12) பணியில் சேர உத்தரவிடப்பட்டுள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகபட்ச வாக்குப்பதிவு செய்ய வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT