வேலூர்

நவீன வணிக வளாகம் கட்டமாநகராட்சி கடைகள் இடிப்பு

DIN

பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் ரூ. 5 கோடியில் ஓரடுக்கு நவீன வணிக வளாகம் கட்டுவதற்காக வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே உள்ள மாநகராட்சி வணிக வளாகம் இடிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே ஆஞ்சநேயா் கோயிலுக்கு அருகே மாநகராட்சிக்குச் சொந்தமாக 14 கடைகள் கொண்ட வணிக வளாகம் உள்ளது. இங்குள்ள கடைகள் மாநகராட்சி சாா்பில் ஏலம் விடப்பட்டு வாடகை வசூலிக்கப்பட்டு வந்தன. பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் இந்த வணிக வளாகத்தை இடித்துவிட்டு ரூ.5 கோடியில் 40 கடைகள் கொண்ட ஓரடுக்கு வணிக வளாகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, இக்கடைகளை காலி செய்ய கடைக்காரா்களுக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே நோட்டீஸ் அளிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் கெடு தேதிக்குள் அவா்கள் காலி செய்தததை அடுத்து பழைய வணிக வளாகக் கட்டடத்தை இடிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

மாநகராட்சி 2-ஆவது மண்டல உதவி ஆணையா் மதிவாணன் தலைமையில் மாநகராட்சி ஊழியா்கள், போலீஸாரின் பாதுகாப்புடன் ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு இந்த வணிக வளாகத்தை இடித்தனா்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், இடிக்கப்படும் இந்த வணிக வளாகத்துக்கு மாற்றாக ரூ. 5 கோடியில் 40 கடைகள் கொண்ட ஓரடுக்கு நவீன வணிக வளாகம் கட்டப்பட உள்ளது. இதில் காா், இருசக்கர வாகனம் நிறுத்துமிடம், கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இடம்பெற உள்ளன. புதிய வணிக வளாகம் கட்டும் பணிகள் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT