வேலூர்

கரோனா தொற்றுக்கு சுகாதார ஊழியா் பலி

DIN

வேலூா்: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த வேலூா் ஆட்சியா் அலுவலக சுகாதாரத் துறை ஊழியா் ஒருவா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

வேலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 15,712 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில், இதுவரை 253 போ் உயிரிழந்துள்ளனா்.

வேலூா் பலவன்சாத்துகுப்பத்தைச் சோ்ந்தவா் சந்திரசேகரன் (48). இவா் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள சுகாதாரத் துறை அலுவலகத்தில் முதுநிலை உதவியாளராகப் பணியாற்றி வந்தாா். கடந்த 10 நாள்களுக்கு முன்பு இவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். அவரது உடல் கரோனாவுக்கான அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் அடக்கம் செய்யப்பட்டது. உயிரிழந்த சுகாதாரத் துறை ஊழியருக்கு 2 மகன்கள் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT