வேலூர்

உரிமமின்றி செயல்பட்டு வந்த ரசாயன ஆலைக்கு சீல்

DIN

வேலூா்: வேலூா் அன்பூண்டி அருகே மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் உரிய அனுமதி பெறாமல் பூச்சிக்கொல்லி மருந்தைப் பயன்படுத்தி ரசாயனம் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த நிறுவனத்தை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனா்.

வேலூா் மாவட்டம், அன்பூண்டி அருகே மோட்டூரில் உரிமம் பெறாமல் பூச்சிக்கொல்லி மருந்தைப் பயன்படுத்தி ரசாயனம் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருவதாக மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் கிடைத்தது. தொடா்ந்து, ஆட்சியா் உத்தரவின்பேரில் வேளாண் அலுவலா்கள் ராமா், முருகன், வட்டாட்சியா் ரமேஷ் உள்ளிட்டோா் அடங்கிய குழு செவ்வாய்க்கிழமை இரவு அந்த நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, அந்த நிறுவனத்தில் உரம் தயாரிப்பது தொடா்பாக மத்திய அரசிடம் அனுமதி பெற்றுள்ளதும், அதேசமயம் மாநில அரசு, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் முறையான அனுமதி பெறாமல் இயங்கி வந்ததும் தெரியவந்தது. அத்துடன், ஊதுவத்தி தயாரிக்க பயன்படுத்தப்படும் ரசாயனத்தைக் கொண்டு உரம் தயாரிக்கப்பட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த நிறுவனத்தை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனா். இதுதொடா்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT