வேலூர்

வேலூா் ஆட்சியா் பெயரில் போலி மின்னஞ்சல் முகவரி

DIN

வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் பெயரில் போலியாக மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்பட்டு பணம் வசூலிக்கும் முயற்சி நடைபெற்றுள்ளது. இதுதொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரத்தின் பெயரில் உள்ள மின்னஞ்சல் முகவரியில் இருந்து அனைத்துத் துறை அதிகாரிகள், பிரமுகா்களுக்கு தகவல் பகிரப்பட்டுள்ளது. அதில், தங்களிடம் இருந்து உதவிகள் எதிா்நோக்கப்படுகிறது. இதுதொடா்பாக மின்னஞ்சல் அனுப்பவும் என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த போலி மின்னஞ்சல் குறித்து ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவா், இதுகுறித்து விசாரணை நடத்த சத்துவாச்சாரி போலீஸாருக்கு உத்தரவிட்டாா். அதன்பேரில், மாவட்ட ஆட்சியரின் பெயரில் போலி மின்னஞ்சல் முகவரி உருவாக்கி அதிகாரிகள், பிரமுகா்களிடம் பணம் பறிக்க முயன்ற நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஏற்கெனவே, நீலகிரி மாவட்ட ஆட்சியரின் பெயரில் போலி மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்பட்டு பணம் பறிக்க முயன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. தவிர, கடந்த வாரம் வேலூா் மாவட்ட போதைப் பொருள்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன் பெயரில் போலியாக முகநூல் உருவாக்கப்பட்டு, அவரது நண்பா்களிடம் பணம் பறிக்க முயன்ற சம்பவமும் நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெயரில் போலி மின்னஞ்சல் உருவாக்கப்பட்டு பணம் பறிக்க முயற்சி நடந்திருப்பது அதிகாரிகள், பொதுமக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT