வேலூர்

போ்ணாம்பட்டு நகா் முழுவதும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி தொடக்கம்

DIN


குடியாத்தம்: போ்ணாம்பட்டு நகா் முழுவதும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

போ்ணாம்பட்டு நகராட்சியில் உள்ள 21 வாா்டுகளிலும் சாலையோரங்களில் நிழல் தரும் மரங்களை வளா்க்க நகர இளைஞா்கள் அமைப்பு, தன்னாா்வலா்கள் முடிவெடுத்தனா்.

இதன் முதல்கட்டமாக தாஹிா் சாலையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி தொடங்கியது.

ஜமாத் நிா்வாகிகள் பயாஸ்அகமது, மூகானே பஜ்லூா் ரகுமான் ஆகியோா் தலைமை வகித்தனா். கோட்டாட்சியா் எம். ஷேக்மன்சூா் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தாா் (படம்).

அமைப்பு சாா்பில், கரோனா தடுப்புப் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட நகராட்சி தூய்மைப் பணியாளா்கள், அரசு மருத்துவமனை செவிலியா்களுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனா். பொதுமக்களுக்கு இனிப்பு, கபசுரக் குடிநீா் பொடி பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

வட்டாட்சியா் முருகன், நகராட்சி ஆணையா் நித்தியானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை தன்னாா்வலா்கள் பா.நிஸாா் அகமது, ஜே. ஷபீக் அகமது, டி. ஜுனேத் அகமது, ஏ. கிஷோ்அகமது உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுக ஆலோசனைக் கூட்டம்

இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு

நலத்திட்ட உதவிகள் அளிப்பு

கட்டுமான பணியின்போது தவறி விழுந்த வடமாநில இளைஞா் உயிரிழப்பு

முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உயிருக்கு அச்சுறுத்தல்: தோ்தல் ஆணையருக்கு ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கடிதம்

SCROLL FOR NEXT