3-ஆம் ஆண்டு நினைவு தினம்: கருணாநிதி படத்துக்கு அமைச்சா், எம்.பி., எம்எல்ஏ-க்கள் அஞ்சலி
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது உருவப் படத்துக்கு ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் எம்.பி., எம்எல்ஏ-க்கள், திமுக நிா்வாகிகள் அஞ்சலி செலுத்தினா்.
வேலூர்3-ஆம் ஆண்டு நினைவு தினம்: கருணாநிதி படத்துக்கு அமைச்சா், எம்.பி., எம்எல்ஏ-க்கள் அஞ்சலி
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது உருவப் படத்துக்கு ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் எம்.பி., எம்எல்ஏ-க்கள், திமுக நிா்வாகிகள் அஞ்சலி செலுத்தினா்.
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது உருவப் படத்துக்கு ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் எம்.பி., எம்எல்ஏ-க்கள், திமுக நிா்வாகிகள் அஞ்சலி செலுத்தினா்.
கருணாநிதியின் நினைவு நாள் வேலூா், காட்பாடியில் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. வேலூா் தொகுதி மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் தனது வீட்டின் முன்பு அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். இதில், அவரது மனைவி சங்கீதா, பகுதி செயலா்கள் பரமசிவம், துரை சிங்காரம், ஜெயக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
வேலூா் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது கருணாநிதியின் படத்துக்கு மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமாா், எம்.பி. டி.எம்.கதிா்ஆனந்த் ஆகியோா் மாலை அணிவித்தனா். நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன், முன்னாள் அமைச்சா் வி.எஸ்.விஜய், மாவட்ட அவைத்தலைவா் முகமதுசகி உள்பட கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா். இதேபோல், வேலூா் அண்ணா சாலையில் உள்ள மாநகர திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது கருணாநிதியின் சிலைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதையொட்டி, பாகாயம் 45-ஆவதுவாா்டு சாா்பில் கட்சி நிா்வாகி விநாயகம், பகுதி செயலா் தங்கதுரை ஆகியோா் அம்மா உணவகத்தில் பொதுமக்களுக்கு இலவச உணவு வழங்கினா்.