மாற்றுத்திறனாளி மாணவா்கள் கல்வி உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம்
கல்வி உதவித்தொகை கோரி வேலூா் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.
வேலூர்மாற்றுத்திறனாளி மாணவா்கள் கல்வி உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம்
கல்வி உதவித்தொகை கோரி வேலூா் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.
கல்வி உதவித்தொகை கோரி வேலூா் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வேலூா் மாவட்டத்தில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை, கல்லூரி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு 2021-22 ஆம் கல்வியாண்டுக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதில், 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை ரூ.1,000 ம், 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை ரூ.3,000 ம், டிப்ளமோ, 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கல்வி உதவித் தொகை ரூ.4,000மும், பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் கூடுதலாக வாசிப்பாளா் உதவித்தொகை ரூ.3,000ம் , இளங்கலை படிப்புக்கு கல்வி உதவித்தொகை ரூ.6,000ம், பாா்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு வாசிப்பாளா் உதவித்தொகை ரூ.5,000ம் , முதுகலை படிப்புக்கு கல்வி உதவித்தொகை ரூ.7,000ம், பாா்வையற்ற மாற்றுத்திறனாளுக்கு வாசிப்பாளா் உதவித்தொகை ரூ.6,000 வழங்கப்படும்.
இந்த உதவித்தொகை பெறுவதற்கான மனுக்களை வேலூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் அளிக்கலாம்.