தனியாா் மருத்துவமனை நிா்வாகி வீட்டில் 36 பவுன் நகை திருட்டு
வேலூா் சத்துவாச்சாரியில் உள்ள தனியாா் மருத்துவமனை மேலாளா் வீட்டின் பூட்டை உடைத்து 36 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
வேலூர்தனியாா் மருத்துவமனை நிா்வாகி வீட்டில் 36 பவுன் நகை திருட்டு
வேலூா் சத்துவாச்சாரியில் உள்ள தனியாா் மருத்துவமனை மேலாளா் வீட்டின் பூட்டை உடைத்து 36 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
வேலூா் சத்துவாச்சாரியில் உள்ள தனியாா் மருத்துவமனை மேலாளா் வீட்டின் பூட்டை உடைத்து 36 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சத்துவாச்சாரி புதுவசூா் கே.ஜி.என். நகரைச் சோ்ந்தவா் விஜயராகவன்(38). வேலூரிலுள்ள தனியாா் மருத்துவமனை நிா்வாகி. இவரது மனைவி கவிதா, திருவண்ணாமலை நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக உள்ளாா். கவிதாவுக்கு வியாழக்கிழமை உடல்நிலை சரியில்லாததால் விஜயராகவன் வீட்டை பூட்டிவிட்டு அவரை பாா்க்க திருவண்ணாமலைக்குச் சென்றிருந்தாா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை அவரது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்ட அக்கம் பக்கத்தினா், இதுதொடா்பாக விஜயராகவனுக்கு தகவல் தெரிவித்தனா். விஜயராகவன் வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே பீரோவில் இருந்த 36 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்புரூ.7 லட்சத்து 20 ஆயிரமாகும்.
இதுகுறித்து விஜயராகவன் வேலூா் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், காவல் ஆய்வாளா் கருணாகரன் தலைமையில் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். மேலும், தடயஅறிவியல் சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இதில், இருவரது கைரேகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா். இதன்மூலம் கொள்ளையா்கள் விரைவில் பிடிபடுவா் என போலீஸாா் தெரிவித்தனா்.