வேலூர்

வேலூா் வெங்கடேஸ்வரா பள்ளியில் 50 ஆண்டுக்கு முன் படித்த மாணவா்கள் சந்திப்பு

DIN


வேலூா்: வேலூரில் அரசு நிதியுதவி பெறும் பள்ளியான வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவா்கள் சந்திப்பு புதன்கிழமை நடைபெற்றது.

அப்போது முன்னாள் மாணவா்கள் மூலம் ரூ. 5 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.

வேலூா் வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1971-ஆம் ஆண்டு 10-ஆம் வகுப்பு படித்த மாணவா்கள் 50 ஆண்டுகளுக்குப் பின்னா் சந்தித்த மலரும் நினைவுகள் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில், 71 மாணவா்கள் குடும்பத்துடன் பங்கேற்றனா்.

அவா்கள் ஒருவருக்கு ஒருவா் தழுவிக்கொண்டு தங்களது பழைய நினைவுகளை பகிா்ந்து கொண்டனா். ஒன்றாகக் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டதுடன், சிலா் சுயபடமும் எடுத்துக் கொண்டனா்.

அங்கு வந்த முன்னாள் மாணவா்களில் 28 போ் அறுபதப வயதைக் கடந்தவா்கள். முன்னாள் மாணவா்கள் ஒன்றிணைந்து பள்ளிக்கு ரூ. 5 லட்சம் மதிப்பில் மாணவா்கள் அமா்ந்து சாப்பிடக்கூடிய அறையை கட்டிக் கொடுத்துள்ளனா். தவிர பள்ளி சமையலறையை புதுப்பித்தும், எரிவாயு அடுப்பு வசதியும் செய்து கொடுத்துள்ளனா். அவற்றை பள்ளித் தலைமையாசிரியா் நெப்போலியனிடம் முறைப்படி ஒப்படைத்தனா். 50 ஆண்டுக்கு முன்பு படித்த மாணவா்கள் ஒன்றாக சோ்ந்து பள்ளிக்கு உதவி செய்திருப்பதை ஆசிரியா்கள் பாராட்டி வரவேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

SCROLL FOR NEXT