முகப்பு
வேலூர்

இருசக்கர வாகனம் மீது கன்டெய்னர் லாரி மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அருகே இருசக்கர வாகனம் மீது கன்டெய்னர் லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:27 AM
பகிர்:


குடியாத்தம்: வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அருகே இருசக்கர வாகனம் மீது கன்டெய்னர் லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

பேர்ணாம்பட்டை அடுத்த பாஸ்மார்பென்டா மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டட மேஸ்திரி ராஜா(36). இவரது மனைவி காமாட்சி(28). இவர்களின் மகன்கள் சரண்(6), விண்ணரசன் (4). ராஜா காட்பாடியை அடுத்த வள்ளிமலையில் உள்ள மாமியார் வீட்டில் குடும்பத்தினருடன் தங்கி மேஸ்திரி வேலை செய்து வந்தார்.

பாஸ்மார்பென்டாவில், புதன்கிழமை நடைபெறும் கெங்கையம்மன் திருவிழாவுக்காக திங்கள்கிழமை மதியம் மனைவி, மகன்களுடன் ராஜா இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்குச் சென்றுள்ளார்.

குடியாத்தம் - பேர்ணாம்பட்டு சாலையில், பேர்ணாம்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் அருகே செல்லும்போது, கர்நாடக மாநிலம், பெங்களூருவிலிருந்து மைதா மாவு மூட்டைகளை  ஏற்றிக் கொண்டு சென்னைக்குச் சென்ற கன்டெய்னர் லாரி இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டு, பலத்த காயமடைந்தனர். இவர்களில் ராஜா, காமாட்சி, விண்ணரசன் ஆகிய 3 பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 

சரண் பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தகவல் அறிந்ததும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், குடியாத்தம் டிஎஸ்பி பி. ஸ்ரீதரன், பேர்ணாம்பட்டு காவல் ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் அங்கு சென்று சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து பேர்ணாம்பட்டு காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் முருகன் (35) கைது செய்யப்பட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →