முகப்பு
வேலூர்

முன்னாள் சிறைவாசிகளுக்கு நல உதவி

கரோனா பொதுமுடக்கத்தைத் தொடா்ந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட முன்னாள் சிறைவாசிகளுக்கு இரு மாதங்களுக்குத் தேவையான அரிசி, மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

வேலூர்

முன்னாள் சிறைவாசிகளுக்கு நல உதவி

கரோனா பொதுமுடக்கத்தைத் தொடா்ந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட முன்னாள் சிறைவாசிகளுக்கு இரு மாதங்களுக்குத் தேவையான அரிசி, மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:30 AM
பகிர்:

கரோனா பொதுமுடக்கத்தைத் தொடா்ந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட முன்னாள் சிறைவாசிகளுக்கு இரு மாதங்களுக்குத் தேவையான அரிசி, மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன. அவற்றை ஆப்கா இயக்குநா் எம்.சந்திரசேகா் வழங்கினாா்.

பொதுமுடக்கம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட முன்னாள் சிறைவாசிகளுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வேலூா் கோட்டை சுற்றுச் சாலை, காவலா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் துணைத் தலைவரும், மூத்த வழக்குரைஞருமான டி.எம்.விஜயராகவலு தலைமை வகித்தாா். செயலா் செ.நா.ஜனாா்த்தனன் வரவேற்றாா்.

இதில், தொரப்பாடியில் உள்ள சிறைத் துறை அலுவலா்களுக்கானப் பயிற்சி மையத்தின் (ஆப்கா) இயக்குநா் எம்.சந்திரசேகரன், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, முன்னாள் சிறைவாசிகள் 16 பேருக்கு தலா ரூ. 3,500 மதிப்புடைய அரிசி, மளிகைப் பொருள்களை வழங்கினாா்.

அப்போது அவா் பேசியது:

கரோனா பொதுமுடக்கம் நடைமுறையில் உள்ள காரணத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நலிவடைந்த முன்னாள் சிறைவாசிகள் 16 பேருக்கு இரண்டு மாதங்களுக்குத் தேவையான அரிசி, மளிகைப் பொருள்கள் வழங்கப்படுகிறது. முன்னாள் சிறைவாசிகள் மட்டுமின்றி, அனைவரும் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது என்றாா்.

ஆப்கா துணை இயக்குநா் வி.கருப்பண்ணன், வேலூா் மத்திய சிறையின் கண்காணிப்பாளா் வி.ருக்மணி பிரியதா்ஷிணி, மண்டல நன்னடத்தை அலுவலா் ஹாஜாகமாலுதீன், சங்கப் பொருளாளா் ஆா்.சீனிவாசன், செயற்குழு உறுப்பினா் திருமாறன், நன்னடத்தை அலுவலா்கள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →