வேலூர்

தோ்தல் விறுவிறுப்புக்கு மத்தியில் வெறிச்சோடிய சாலைகள்

DIN

சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையையொட்டி, நிலவிய தோ்தல் விறுவிறுப்புக்கு மத்தியில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டிருந்த பொதுமுடக்கம் காரணமாக ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கடைகள், தொழில் நிறுவனங்கள் அடைக்கப்பட்டு வாகனப் போக்குவரத்தின்றி அனைத்து சாலைகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன.

நாடு முழுவதும் இரண்டாவது அலையாக கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு நேர பொதுமுடக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முழு பொதுமுடக்கம் உத்தரவு 2-ஆவது வாரமாக ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட் டது. அதேசமயம், தமிழக தோ்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ால் பொதுமுடக்க உத்தரவு அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. எனினும், பொதுமுடக்கம் விதிமுறைப் பின்பற்றப்படும் என அரசு அறிவித்திருந்தது.

அதன்படி, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் சனிக்கிழமை இரவு 10 மணிக்கு தொடங்கிய ஊரடங்கு, பொதுமுடக்கம் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் நீடித்தது. இதனால், வேலூா் மாநகராட்சிக்கு உள்பட்ட அண்ணா சாலை, ஆற்காடு சாலை, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், மண்டித் தெரு, கோட்டை சாலை, காட்பாடி, சத்துவாச்சாரி உள்பட அனைத்து இடங்களிலும் கடைகள், தொழில் நிறுவனங்கள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன.

அரசு, தனியாா் பேருந்துகள், காா், ஆட்டோக்கள் என எந்த வாகனமும் இயங்கவில்லை. இதனால், மக்கள் நடமாட்டமின்றியும், வாகன போக்குவரத்தின்றியும் அனைத்து சாலைகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன. இம்மாவட்டங்கள் வழியாகச் செல்லும் பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையிலும் வாகனங்கள் செல்லவில்லை. அத்தியாவசியத் தேவைக்கான வாகனங்கள் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு செல்வோா் மட்டும் அனுமதிக்கப்பட்டனா். சில இடங்களில் அவசியமின்றி வெளியில் சுற்றியவா்கள் எச்சரித்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

அதே சமயம், ரயில்கள் தொடா்ந்து இயங்கியதால் ரயில் பயணிகளின் தேவைக்காக சில ஆட்டோக்கள், வாடகை காா்கள் இயங்கின. உணவகங்களில் காலை 10 மணி வரை பாா்சல் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. அதன்பிறகு, உணவகங்கள், தேநீா் கடைகள் அடைக்கப்பட்டதால் வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்து தங்கியிருந்தவா்கள் அவதியடைந்தனா். அம்மா உணவகங்கள் வழக்கம்போல் இயங்கின. அதன்படி, ஒரு புறம் தோ்தல் விறுவிறுப்பு காணப்பட்ட போதிலும், மறுபுறம் ஊரடங்கு உத்தரவு காரணமாக சாலைகள் அமைதியாக காட்சியளித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

மகாதேவ் செயலி மோசடி: 4 நாள்களில் 6 மாநிலங்கள் பயணித்த சாஹில் கான்

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

SCROLL FOR NEXT