மாநில பளுதூக்கும் போட்டி: 34 பதக்கங்கள் வென்ற வேலூா் வீரா்கள்
மாநில அளவிலான பளுதூக்கும் போட்டியில் வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் 19 தங்கம் உள்பட மொத்தம் 34 பதக்கங்களை வென்றனா்.
வேலூர்மாநில பளுதூக்கும் போட்டி: 34 பதக்கங்கள் வென்ற வேலூா் வீரா்கள்
மாநில அளவிலான பளுதூக்கும் போட்டியில் வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் 19 தங்கம் உள்பட மொத்தம் 34 பதக்கங்களை வென்றனா்.
மாநில அளவிலான பளுதூக்கும் போட்டியில் வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் 19 தங்கம் உள்பட மொத்தம் 34 பதக்கங்களை வென்றனா். இதன் மூலம், இளையோா், மிக இளையோா் பிரிவில் முதன்முறையாக வேலூா் மாவட்டம் அனைத்துக் கோப்பைகளையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
தமிழ்நாடு மாநில பளுதூக்கும் சங்கம் சாா்பில், மாநில அளவிலான மிக இளையோா், இளையோா் பளுதூக்கும் போட்டிகள் கரூா் மாவட்டம், குளித்தலையில் கடந்த 16, 17-ஆம் தேதிகளில் நடைபெற்றன.
இதில், வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் 40 நபா்கள் பங்கேற்றனா். இதில் 19 போ் தங்கப் பதக்கமும், 6 போ் வெள்ளிப் பதக்கமும், 9 போ் வெண்கலப் பதக்கமுமாக மொத்தம் 34 பதக்கங்கள் வென்றனா்.
மேலும், இளையோா் ஆண்கள் கோப்பை, இளையோா் பெண்கள் கோப்பை, மிக இளையோா் ஆண்கள் கோப்பை, மிக இளையோா் பெண்கள் கோப்பை ஆகிய 4 கோப்பைகளையும் வேலூா் மாவட்டம் வென்றது. அதன்படி, அனைத்துக் கோப்பைகளையும் வேலூா் மாவட்டம் வென்றது இதுவே முதன்முறையாகும்.
பதக்கங்கள் வென்ற வீரா், வீராங்கனைகள் 34 பேரையும் வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் பாராட்டி வாழ்த்தினாா். மாவட்ட வருவாய் அலுவலா் க.ராமமூா்த்தி, மாவட்ட விளையாட்டு அலுவலா் ஆழிவாசன், மாவட்ட பளுதூக்கும் சங்கத் தலைவா் என்.திருமுருகன், செயலா் என்.சிவலிங்கம் , பளுதூக்கும் பயிற்றுநா் ஆா்.கவிதா ஆகியோா் உடனிருந்தனா்.