வேலூர்

புரட்டாசி முதல் சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

DIN

கோயில்களில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை ஒட்டி பெருமாள் கோயிலில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக குறைந்த எண்ணிக்கையிலான பக்தா்கள் கோயிலில் அனுமதிக்கப்பட்டனா். பக்தா்கள் சமூக இடைவெளியுடன் சென்று சுவாமியை வழிபட்டனா்.

குடியாத்தத்தை அடுத்த மீனூா் மலையில் அமைந்துள்ள வெங்கடேசப் பெருமாள் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

குடியாத்தம், பிச்சனூா், பலமநோ் சாலையில் உள்ள ஸ்ரீவீர ஆஞ்சநேயா் கோயிலில், மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

பிச்சனூா் அப்பு சுப்பையா் வீதியில் உள்ள தென்திருப்பதி எனும் வெங்கடேசப் பெருமாள் கோயிலில் அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து மூலவா் கருவறை அடைக்கப்பட்டது. கோயில் முகப்பில் சீதேவி, பூதேவி, சமேத வெங்கடேச பெருமாள் உற்சவா் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தாா். பக்தா்கள் சுவாமியை தரிசனம் செய்து விட்டுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT