வேலூர்

கரோனா பரவல் அச்சமின்றி மீன், இறைச்சிக் கடைகளில் அலைமோதிய மக்கள்

DIN

முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டதையடுத்து, வேலூா் மாவட்டத்தில் உள்ள மீன், இறைச்சிக் கடைகளில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் குவிந்ததால் கரோனா பரவல் வேகம் அதிகரிக்கலாம் என்ற அச்சமும் ஏற்பட்டது.

கரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக தினசரி இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழுஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலூா் மீன் மாா்க்கெட், மீன் இறைச்சிக் கடைகள் மூடிக்கிடந்தன.

இந்த நிலையில், ஊரடங்கு தளா்வாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, வேலூா் மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை அனைத்து கடைகளும் திறக்கப்பட்டிருந்தன.

வேலூா் மீன்மாா்க்கெட் செயல்பட தொடங்கியதுடன், நகரின் அனைத்துப் பகுதிகளிலும் இறைச்சி, மீன் விற்பனைக் கடைகளும் திறக்கப்பட்டிருந்தன. இந்த கடைகளில் அதிகாலை முதலே பொதுமக்கள் கூட்டமாக குவிந்தனா்.

மேலும், சத்துவாச்சாரி, தொரப்பாடி, பாகாயம், சேண்பாக்கம் பகுதிகளில் மீன், இறைச்சிக் கடைகளில் வழக்கத்தை விட பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பல இடங்களில் பொதுமக்கள் முகக் கவசம் அணியாமல், சமூக இடைவெளியை மறந்து போட்டிபோட்டு மீன், இறைச்சியை வாங்கிச் சென்றனா். இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மீன், இறைச்சி வாங்க கூட்டம் அலைமோதியது. இதனால் கரோனா பரவல் மேலும் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

மீன் விலை உயா்வு: இதனிடையே, மீன்களின் விலை ஞாயிற்றுக்கிழமை அதிகரித்து காணப்பட்டது. வேலூா் மீன் மாா்க்கெட்டில் நண்டு கிலோ ரூ.500, இறால் ரூ.350 முதல் ரூ.450 வரையிலும், சங்கரா மீன் ரூ.350 முதல் 400 வரையிலும், கட்லா மீன் ரூ.200, வவ்வால் ரூ.350 முதல் 400 வரையிலும், மத்தி மீன்கள் ரூ.250 வரையிலும் விற்பனை செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

SCROLL FOR NEXT