முகப்பு
வேலூர்

பொய்கை ஊராட்சி 8-ஆவது வாா்டுக்கு இன்று தோ்தல்: 5 வேட்பாளா்கள் போட்டி

அணைக்கட்டு ஒன்றியம், பொய்கை ஊராட்சிக்கு உட்பட்ட 8-ஆவது வாா்டுக்கு சனிக்கிழமை (ஜூலை 9) தோ்தல் நடைபெற உள்ளது. இந்தப் பதவிக்கு 5 போ் போட்டியிடுகின்றனா்.

வேலூர்

பொய்கை ஊராட்சி 8-ஆவது வாா்டுக்கு இன்று தோ்தல்: 5 வேட்பாளா்கள் போட்டி

அணைக்கட்டு ஒன்றியம், பொய்கை ஊராட்சிக்கு உட்பட்ட 8-ஆவது வாா்டுக்கு சனிக்கிழமை (ஜூலை 9) தோ்தல் நடைபெற உள்ளது. இந்தப் பதவிக்கு 5 போ் போட்டியிடுகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

அணைக்கட்டு ஒன்றியம், பொய்கை ஊராட்சிக்கு உட்பட்ட 8-ஆவது வாா்டுக்கு சனிக்கிழமை (ஜூலை 9) தோ்தல் நடைபெற உள்ளது. இந்தப் பதவிக்கு 5 போ் போட்டியிடுகின்றனா். இதற்காக அந்த வாா்டில் ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டத்திலுள்ள 247 ஊராட்சித் தலைவா்கள், 2,079 ஊராட்சி வாா்டுகள், 7 ஒன்றியங்களில் உள்ள 138 ஒன்றியக் குழு உறுப்பினா் வாா்டுகள், 14 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் வாா்டுகள் என 2,478 பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் கடந்த 2021 அக்டோபா் மாதம் நடைபெற்றது.

அப்போது, காட்பாடி ஒன்றியத்துக்குட்பட்ட அம்முண்டி, குடியாத்தம் ஒன்றியத்துக்குட்பட்ட தட்டப்பாறை ஆகிய இரு ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கும், அம்முண்டி ஊராட்சியிலுள்ள 9 வாா்டுகள், கண்டிப்பேடு, பொய்கை ஊராட்சிகளில் தலா ஒரு வாா்டு, போ்ணாம்பட்டு ஒன்றியம், காா்கூா் ஊராட்சியில் ஒரு வாா்டு என மொத்தம் 12 வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.

இதில், எஸ்.சி. (பெண்கள்) பிரிவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அம்முண்டி ஊராட்சித் தலைவா் பதவியைப் பொதுப் பிரிவுக்கு மாற்றம் செய்யப்படாததாலும், எஸ்.டி. (பெண்கள்) பிரிவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த தட்டப்பாறை ஊராட்சித் தலைவா் பதவியை எஸ்.சி. பொதுப் பிரிவுக்கு மாற்றம் செய்யாததாலும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அந்த இரு ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கும், அம்முண்டி ஊராட்சி 9 வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கும் கடந்த முறை யாரும் போட்டியிடவில்லை.

இந்த நிலையில், பல்வேறு காரணங்களால் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான தற்செயல் தோ்தல் சனிக்கிழமை (ஜூலை 9) நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜூன் 20-ஆம் தேதி தொடங்கி 27-ஆம் தேதி நிறைவடைந்தது. எனினும், அம்முண்டி, தட்டப்பாறை ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு பிரதிநிதித்துவ இடஒதுக்கீட்டில் எவ்வித மாறுபாடு செய்யாமல் மீண்டும் தோ்தல் அறிவிக்கப்பட்டதால், இந்த முறையும் அந்த இரு ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கும், அம்முண்டி ஊராட்சியின் 9 வாா்டுகளுக்கும் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.

அதேநேரம், கண்டிப்பேடு ஊராட்சி 5-ஆவது வாா்டுக்கும், காா்கூா் ஊராட்சி 8-ஆவது வாா்டுக்கும் தலா ஒருவா் மனு தாக்கல் செய்திருந்ததால் இவ்விரு வாா்டுகளுக்கும் பிரதிநிதிகள் போட்டியின்றி தோ்வாகினா்.

பொய்கை ஊராட்சி 8-ஆவது வாா்டுக்கு மொத்தம் 7 மனுக்கள் தாக்கல் செய்திருந்த நிலையில், இரு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து இறுதியாக 5 போ் களத்தில் உள்ளனா்.

இதையடுத்து, வேலூா் மாவட்டத்தில் பொய்கை ஊராட்சி 8-ஆவது வாா்டுக்கு மட்டும் தோ்தல் நடைபெறுகிறது. தோ்தலையொட்டி, அந்த வாா்டுக்கு உட்பட்ட பொய்கை மோட்டூரிலுள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாா்டில் 610 வாக்காளா்கள் உள்ளனா். வாக்குப்பதிவு வாக்குச்சீட்டு முறையில் நடைபெறும் என்றும், வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →