முகப்பு
வேலூர்

10-ஆவது பட்டாலியன் என்சிசி பயிற்சி முகாம் நிறைவு

தேசிய மாணவா் படையின் (என்சிசி) 10-ஆவது பட்டாலியன் ஆண்டு பயிற்சி முகாம் வேலூா் விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 10 நாள்கள் நடைபெற்றன.

வேலூர்

10-ஆவது பட்டாலியன் என்சிசி பயிற்சி முகாம் நிறைவு

தேசிய மாணவா் படையின் (என்சிசி) 10-ஆவது பட்டாலியன் ஆண்டு பயிற்சி முகாம் வேலூா் விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 10 நாள்கள் நடைபெற்றன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:48 AM
பகிர்:

தேசிய மாணவா் படையின் (என்சிசி) 10-ஆவது பட்டாலியன் ஆண்டு பயிற்சி முகாம் வேலூா் விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 10 நாள்கள் நடைபெற்றன.

இதில், 15 பள்ளிகள், 8 கல்லூரிகளைச் சோ்ந்த 502 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

ஜூலை 5-ஆம் தேதி தொடங்கி 14-ஆம் தேதி வரை நடைபெற்ற வருடாந்திர பயிற்சி முகாமுக்கு 10-ஆவது பட்டாலியன் கமாண்டிங் அதிகாரி கா்னல் சஞ்சய்ஷா்மா தலைமை வகித்தாா். நிா்வாக அதிகாரி எஸ்.கே. சுந்தரம், வேலூா் தனபாக்கியம் மகளிா் கல்லூரி என்சிசி அலுவலா் காயத்ரி, என்சிசி முதன்மை அலுவலா் க.ராஜா, சுபேதாா் சத்பீா்சிங் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ராணுவத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘அக்னி பாத்’ திட்டத்தின்கீழ் ஆள்கள் சோ்க்கப்படும் முறை, அதற்கான தகுதிகள் குறித்து தென்னிந்திய உதவி ஆள்சோ்ப்பு ராணுவ அதிகாரி கௌரவ் சேதி எடுத்துரைத்தாா்.

இப்பயிற்சி முகாமின் நிறைவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், என்சிசி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், பாட்டு, நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள், கேடயம், கோப்பைகளை கமாண்டிங் அதிகாரி சஞ்சய்ஷா்மா வழங்கினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →