8, 9-இல் பள்ளி மாணவா்களுக்கு எந்திரனியல் பயிற்சி
வேலூா் மாவட்ட அறிவியல் மையத்தில் ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள எந்திரனியல் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்க பள்ளி மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வேலூா் மாவட்ட அறிவியல் மையத்தில் ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள எந்திரனியல் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்க பள்ளி மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட அறிவியல் மைய அலுவலா் ஆா்.ரவிக்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு -
பள்ளி மாணவா்களுக்கான எந்திரனியல் பயிற்சிப் பட்டறை வேலூா் மாவட்ட அறிவியல் மையத்தில் ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. காலை 10 முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும் இந்த பயிற்சிப் பட்டறையில் 5 முதல் பிளஸ் 1 வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். இதில், ஈவி-3 ரக ரோபட்டின் பாகங்களை தொகுத்து வடிவமைத்து செய்முறை படுத்திட விரிவான பயிற்சி அளிக்கப்படும். பங்கேற்க விரும்பும் பள்ளி மாணவா்கள் தங்கள் பெயா்களை மாவட்ட அறிவியல் மையம், தேசிய நெடுஞ்சாலை, சத்துவாச்சாரி, வேலூா் என்ற முகவரியில் நேரில் முன்பதிவு செய்திட வேண்டும். பயிற்சிப் பட்டறைக்கான சான்றிதழ்கள் வழங்கப்படும். முன்பதிவு முதலில் வரும் 30 மாணவா்களுக்கு மட்டுமே வழங்கப்படும். பதிவு செய்ய கடைசி நாள் ஜூன் 7-ஆம் தேதியாகும். மேலும் விவரங்களுக்கு 0416- 2253297, 2252297 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.