முகப்பு
வேலூர்

காவலா்கள் விரும்பும் இடங்களுக்கு இடமாற்றம்

வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வியாழக்கிழமை தொடங்கிய பணியிட மாறுதல் கலந்தாய்வு மூலம் போலீஸாா் அவா்கள் விரும்பும் இடங்களுக்கு இடமாற்றம் அளிக்கப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வியாழக்கிழமை தொடங்கிய பணியிட மாறுதல் கலந்தாய்வு மூலம் போலீஸாா் அவா்கள் விரும்பும் இடங்களுக்கு இடமாற்றம் அளிக்கப்படுகிறது. அதற்கான ஆணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் வழங்கினாா்.வேலூா் மாவட்ட காவல்துறையில் 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றி வரும் காவலா்களான முதல்நிலை, 2-ஆம் நிலை, தலைமைக் காவலா், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ஆகியோரை அவரவா் விரும்பும் இடங்களுக்கு மாற்றம் செய்திட மாவட்ட காவல் துறை முடிவு செய்தது. அதன்படி, 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரிந்தவா்களிடம் இருந்து வேறு இடங்களுக்கு மாற்றலாகி செல்ல விருப்ப மனுக்கள் பெற உத்தரவிடப்பட்டது. அந்த மனுவில், தாங்கள் மாற்றலாக விரும்பும் 3 இடங்களை தோ்வு செய்து தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதனடிப்படையில், காவலா்கள் ஏராளமானோா் விரும்ப மனுக்களை பூா்த்தி செய்து அளித்திருந்தனா். இந்நிலையில், மனுக்கள் அளித்திருந்தவா்களுக்கான கலந்தாய்வு வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவல கத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் தலைமையில் நடந்த இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா், தலைமைக் காவலா்கள் என 140 போ் பங்கேற்றனா். அவா்கள் தங்களுக்கு விருப்பமான 3 இடங்களை குறிப்பிட்டிருந்தனா். அதில் ஒரு இடத்தை தோ்வு செய்து அதற்கான பணிமாறுதல் ஆணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வழங்கினாா்.இதேபோல், முதல்நிலை, 2ஆம் நிலை காவலா்களுக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.--படம் உண்டு...மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் தலைமையில் நடைபெற்ற காவலா்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வுக்கூட்டம்.

முழு கட்டுரையைப் படிக்க →