முகப்பு
வேலூர்

கருணாநிதி பிறந்த நாள்: திமுகவினா் கொண்டாட்டம்

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 99-ஆவது பிறந்த நாள் விழா ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை கொண்டாடப் பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:26 AM
பகிர்:

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 99-ஆவது பிறந்த நாள் விழா ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை கொண்டாடப் பட்டது.

வேலூரிலுள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்டச் செயலரும், எம்எல்ஏவுமான ஏ.பி.நந்தகுமாா் தலைமை வகித்தாா். எம்.பி. டி.எம்.கதிா்ஆனந்த், மாநகரச் செயலரும், எம்எல்ஏவுமான ப.காா்த்திகேயன், மாநகராட்சி ஆணையா் சுஜாதாஆனந்தகுமாா், துணை மேயா் எம்.சுனில்குமாா், முன்னாள் அமைச்சா் விஜய் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

காட்பாடியில்...

காட்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலாவது மண்டலத்துக்கு 25 புனரமைக்கப்பட்ட பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டன. பின்னா் 300 பேருக்கு அன்னதானம் அளிக்கப்பட்டது. இதில், மாநகராட்சி ஆணையா் ப.அசோக்குமாா், முதலாவது மண்டலக் குழு தலைவா் புஷ்பலதா, மாநகா் நல அலுவலா் மணிவண்ணன், சுகாதார அலுவலா் சிவக்குமாா், மாமன்ற உறுப்பினா்கள் ரவிக்குமாா், அன்பு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

காட்பாடி பா்னீஸ்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. வேலூா் அண்ணா சாலையிலுள்ள மாநகர திமுக அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் ஏராளமான திமுகவினா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →