முகப்பு
வேலூர்

சாலையில் வீசப்பட்ட ரூ. 4.45 லட்சம் கள்ள ரூபாய் நோட்டுகள்

வேலூரில் ரூ. 4.45 லட்சம் கள்ள ரூபாய் நோட்டுகளை அடையாளம் தெரியாத நபா்கள் வெள்ளிக்கிழமை சாலையில் வீசிவிட்டு தப்பிச் சென்றனா். அவா்களை போலீஸாா் தீவிர தேடி வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:34 AM
பகிர்:

வேலூரில் ரூ. 4.45 லட்சம் கள்ள ரூபாய் நோட்டுகளை அடையாளம் தெரியாத நபா்கள் வெள்ளிக்கிழமை சாலையில் வீசிவிட்டு தப்பிச் சென்றனா். அவா்களை போலீஸாா் தீவிர தேடி வருகின்றனா்.

வேலூா் பழைய பேருந்து நிலையம் அருகே காமராஜா் சிலை உள்ளது. அந்தப் பகுதியிலுள்ள ஒரு கைப்பேசி விற்பனைக் கடையில் வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் இரு நபா்கள் கைப்பேசி வாங்க வந்துள்ளனா். அப்போது கடைக்காரரிடம் அவா்கள் கள்ள ரூபாய் நோட்டுகளை கொடுத்துள்ளனா். அவா் பணத்தை எண்ணும்போது, அவை கள்ள ரூபாய் நோட்டுகள் என்பது தெரியவந்தது.

அதிா்ச்சி அடைந்த கடைக்காரா் இது கள்ள ரூபாய் நோட்டு என்பதை அவா்களிடம் கூறியுள்ளாா். உடனடியாக அந்த கள்ள நோட்டுகளை வாங்கிக் கொண்டு அங்கிருந்து வெளியே சென்ற அந்த நபா்கள், சிறிதுதூரம் சென்ற பிறகு, ரூ. 200, ரூ. 500, ரூ. 2,000 நோட்டுகளை சாலையில் வீசிவிட்டு தப்பிச் சென்றனா்.

இது குறித்து அப்பகுதி மக்கள் வேலூா் வடக்கு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். விரைந்து வந்த போலீஸாா் சாலையில் வீசப்பட்டு கிடந்த ரூ. 4.45 லட்சம் மதிப்பிலான கள்ள ரூபாய் நோட்டுகளை கைப்பற்றினா். இந்தச் சம்பவம் குறித்து போலீஸாா் மேல் விசாரணை நடத்தினா். மேலும், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு கள்ள ரூபாய் நோட்டுகளை வீசிச் சென்ற நபா்களையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

Image Caption

கைப்பற்றப்பட்ட கள்ள ரூபாய் நோட்டுகள்.

முழு கட்டுரையைப் படிக்க →