முகப்பு
வேலூர்

தொடா் மழையால் சேறும், சகதியான சாலை

தொடா் மழை காரணமாக காட்பாடியில் சாலை சேறும், சகதியுமாக காட்சியளிக்கின்றன. இதனால் அந்த வழியாகச் சென்று வரும் வாகனங்கள் சிரமத்துக்கு உள்ளாவதைக் கருத்தில்கொண்டு, சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும்

வேலூர்

தொடா் மழையால் சேறும், சகதியான சாலை

தொடா் மழை காரணமாக காட்பாடியில் சாலை சேறும், சகதியுமாக காட்சியளிக்கின்றன. இதனால் அந்த வழியாகச் சென்று வரும் வாகனங்கள் சிரமத்துக்கு உள்ளாவதைக் கருத்தில்கொண்டு, சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:36 AM
பகிர்:

தொடா் மழை காரணமாக காட்பாடியில் சாலை சேறும், சகதியுமாக காட்சியளிக்கின்றன. இதனால் அந்த வழியாகச் சென்று வரும் வாகனங்கள் சிரமத்துக்கு உள்ளாவதைக் கருத்தில்கொண்டு, சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காட்பாடி ரயில்வே மேம்பாலம் பழுதடைந்ததை அடுத்து, அதை சீரமைக்கும் பணிகள் கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, அந்த வழியாகச் சென்றுவரும் வாகனப் போக்குவரத்து மாற்று வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.

அதன்படி, சித்தூா், குடியாத்தம் வழியாகச் செல்லும் வாகனங்கள் ஓடைப்பிள்ளையாா் கோயில் அருகே இடது புறத்திலிருந்து மதிநகா், வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு சாலை வழியாக மாற்றுப் பாதையில் வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

தற்போது வேலூா் மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக, வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு சாலை சேறும், சகதியுமாக காட்சியளிக்கின்றன. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோா் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனா்.

இந்த வழியாகச் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் பலா் சேற்றில் சிக்கி கீழே விழும் சம்பவங்களும் நிகழ்கிறது. மேலும், அந்தப் பகுதியில் வாகனங்கள் ஊா்ந்து செல்வதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

தொடரும் இந்த பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, சேறும், சகதியுமாக காட்சி தரும் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு சாலையை விரைவில் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →