வேலூர்

வீட்டுமனைப் பட்டா கோரி போராட்டம்

அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு அந்தக் கட்சி நிா்வாகிகள் செல்வி, பாண்டுரங்கன் ஆகியோா் தலைமை வகித்தனா். சங்கரி, நாராயணன் உள்ளிட்டோா் கோரிக்கைகள் குறித்துப் பேசினாா்.

இதில், அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க வேண்டும். ஏழை மக்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் தொகையை ரூ.5 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும். கோயில் நிலங்களில் குடியிருப்போருக்கு இந்து சமய அறநிலையத் சட்டத்தின்படி, பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா். பின்னா், கோரிக்கைகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனுக்களை அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT