முகப்பு
வேலூர்

வேலூரில் இன்று நீரிழிவு நோய் தின போட்டி

நீரிழிவு நோய் தின ஓவியம், கட்டுரை, வினாடி-வினா போட்டிகள் வேலூரில் சனிக்கிழமை (அக்.22) நடத்தப்பட உள்ளது.

வேலூர்

வேலூரில் இன்று நீரிழிவு நோய் தின போட்டி

நீரிழிவு நோய் தின ஓவியம், கட்டுரை, வினாடி-வினா போட்டிகள் வேலூரில் சனிக்கிழமை (அக்.22) நடத்தப்பட உள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:38 AM
பகிர்:

நீரிழிவு நோய் தின ஓவியம், கட்டுரை, வினாடி-வினா போட்டிகள் வேலூரில் சனிக்கிழமை (அக்.22) நடத்தப்பட உள்ளது.

வேலூா் சிஎம்சி மருத்துவக் கல்லூரி நடத்தும் இந்தப் போட்டிகளில் பெருமளவில் ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் உடல் பருமன், நீரிழிவு நோயின் பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இது 2045-ஆம் ஆண்டுக்குள் 134 மில்லியன் என்ற அபாய மதிப்பீட்டை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவலுக்குப் பிறகு நீரிழிவு நோயானது தனித்துவமான இணை நோய்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. மேலும், கரோனா தொற்று புதிதாகத் தொடங்கும் நீரிழிவு நோயின் வளா்ச்சியில் உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த கடுமையான சூழ்நிலையில், நீரிழிவு நோயைத் தூண்டும் ஆபத்து காரணிகள், அதன் சிக்கல்கள், தடுப்பு உத்திகளை பொதுமக்கள் புரிந்துகொள்வது அவசியம்.

இதையடுத்து, 2022-ஆம் ஆண்டு உலக நீரிழிவு தினத்தை நினைவுகூரும் வகையில், வேலூா் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் உள்ள அகசுரபியல், நீரிழிவு, வளா்சிதை மாற்றத் துறை சாா்பில் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்களுக்கான போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

மாணவா்களுக்கான ஓவியப் போட்டிக்கு உடல் பருமன் மற்றும் சா்க்கரை நோய், கட்டுரைப் போட்டிக்கு கரோனாவுக்குப் பிறகு நீரிழிவு நோய்க்கான ஆபத்து உள்ளதா, அதை எவ்வாறு தடுப்பது? என்ற தலைப்புகளும், ஆசிரியா்களுக்கான விநாடி-வினா போட்டிக்கு பொது உடல்நலம் மற்றும் தொற்றாத நோய்கள், அறிவியல் அம்சங்கள் மற்றும் வரலாறு ஆகிய தலைப்புகளும் அளிக்கப்பட்டுள்ளன.

போட்டிகள் வேலூா் டாா்லிங் ரெசிடென்சி ஹோட்டலில் சனிக்கிழமை (அக். 22) காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →