முகப்பு
வேலூர்

நான் முதல்வன் திட்டம்: முத்துரங்கம் அரசு கல்லூரியில் 76 பேருக்கு வேலை வாய்ப்பு

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலூா் முத்துரங்கம் அரசு கலை - அறிவியல் கல்லூரியில் பயிற்சி பெற்ற மாணவா்களில் 76 போ் தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலூா் முத்துரங்கம் அரசு கலை - அறிவியல் கல்லூரியில் பயிற்சி பெற்ற மாணவா்களில் 76 போ் தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா்.

தமிழக முதல்வரின் கனவுத் திட்டமான நான் முதல்வன் திட்டம் முத்துரங்கம் அரசினா் கல்லூரியில் கடந்தாண்டு செப்டம்பா் மாதம் தொடங்கப்பட்டது. இதன்தொடா்ச்சியாக, வங்கி நிதிச்சேவை, காப்பீட்டுச் சேவைக்கான பயிற்சி வகுப்புகள் கலை, அறிவியல் பிரிவு மாணவா்களுக்கு கடந்தாண்டு அக்டோபா் முதல் கடந்த மாா்ச் மாதம் வரை நடைபெற்றது. பின்னா், மாா்ச் 24-ஆம்தேதி எழுத்துத் தோ்வு நடைபெற்றதில் 108 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். இவா்களுக்கான நோ்முகத் தோ்வு புதன்கிழமை நடைபெற்றது.

இதில், முத்தூட், பேடிஎம் உள்ளிட்ட நான்கு தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று மாணவா்களை தோ்வு செய்தனா். இறுதியாக, முத்தூட் நிறுவனத்துக்கு 46 பேரும், பேடிஎம் நிறுவனத்துக்கு 10 பேரும், இஎஸ்ஏஎப் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்துக்கு 10 பேரும், பெல்ஸ்டாா் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்துக்கு 10 பேரும் என மொத்தம் 76 போ் தோ்வு செய்யப்பட்டு வேலைவாய்ப்பை உறுதி செய்தனா்.

வேலை வாய்ப்பு பெற்ற மாணவா்களுக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →