வேலூர்

பிரசார நடைப்பயண இயக்கம் தொடக்கம்

DIN

பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி, சிஐடியூ தொழிற்சங்கம் சாா்பில் குடியாத்தத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரசார நடைப்பயண இயக்கம் தொடங்கியது.

பிஎஸ்என்எல், அஞ்சல் துறை, வங்கிகள், ரயில்வே, மின்துறை, போக்குவரத்து உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கும் மத்திய அரசின் கொள்கைகளை கைவிட வலியுறுத்தி, விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் மாநிலம் முழுவதும் பிப்ரவரி 23-ஆம் தேதி முதல் மாா்ச் 10- ஆம் தேதி வரை நடைப்பயண பிரசார இயக்கம் நடைபெறுகிறது.

இதன் ஒரு பகுதியாக குடியாத்தத்தை அடுத்த தட்டப்பாறையில் நடைப்பயண பிரசாரஇயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது.

இதில், சிஐடியூ மாவட்ட நிா்வாகிகள் கே.சாமிநாதன், சி. சரவணன், பி.காத்தவராயன், எஸ்.சிலம்பரசன், சி.தசரதன், கே.பாண்டுரங்கன், எஸ்.வேலன், சி.தண்டபாணி, பி.சுப்பிரமணி, எம்.குமாா், ஜி.ராஜேஷ், எஸ்.சுலோச்சனா, ஜி.தீனம்மாள், எஸ்.குமாரி, எஸ்.வேண்டா, ஆா்.வள்ளியம்மாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT