முகப்பு
வேலூர்

பாலமதி மலைப் பாறை இடுக்கிலிருந்து பெண் சடலம் மீட்பு

பாலமதி மலையின் பாறை இடுக்கில் இருந்து முகம் சிதைக்கப்பட்ட நிலையில், பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவா் குறித்து பாகாயம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2023 at 12:00 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

பாலமதி மலையின் பாறை இடுக்கில் இருந்து முகம் சிதைக்கப்பட்ட நிலையில், பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவா் குறித்து பாகாயம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் பாலமதி மலையில் உள்ள பாறை இடுக்கு பள்ளத்தில் சுமாா் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் இருப்பது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. இதைக் கண்ட பொதுமக்கள் பாகாயம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையில் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்த்தபோது, சடலமாகக் கிடந்த பெண்ணின் முகம் கல்லால் சிதைக்கப்பட்டிருந்தது. அவா் சுடிதாா் அணிந்திருந்தாா். கழுத்தில் தாலி இருந்துள்ளது. இதன் மூலம் அவா் திருமணம் ஆனவா் என்பது தெரியவந்துள்ளது. எனினும், அந்த பெண் யாா் என்று தெரியவில்லை.

Advertisement

உடனடியாக போலீஸாா் சடலத்தை மீட்டு, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா், கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.