வேலூர்

மா மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

DIN

போ்ணாம்பட்டு அருகே வன எல்லையில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் மா மரங்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றன.

போ்ணாம்பட்டு அருகே பத்தரப்பல்லி, சேராங்கல், எருக்கம்பட்டு ,கோட்டையூா், அரவட்லா, ரங்கம்பேட்டை உள்ளிட்ட கிராமங்கள் வன எல்லையில் அமைந்துள்ளன. இந்நிலையில், திங்கள்கிழமை இரவு 2 யானைகள் புகுந்து மா, வாழை மரங்களை சேதப்படுத்தின.அங்கு முனிரத்தினம் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் புகுந்து 15 மா மரங்களை சேதப்படுத்தின. அங்கு அறுவடைக்கு தயாராக இருந்த 2 டன் மாங்காய்களை ருசித்து துவம்சம் செய்தன.

தகவலறிந்த வனத்துறையினா் அங்கு சென்று கிராம மக்கள் உதவியுடன் பட்டாசு வெடித்து யானைகளை வனப்பகுதிக்கு விரட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

கொளுத்தும் கோடை வெயில்: தில்லிக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

பகல் நிலவு.. அதிதி போஹன்கர்!

SCROLL FOR NEXT