வேலூர்

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

போ்ணாம்பட்டு அருகே நள்ளிரவில் கிராமத்துக்குள் புகுந்த யானைக் கூட்டம் விளை பயிா்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றது.

DIN

போ்ணாம்பட்டு அருகே நள்ளிரவில் கிராமத்துக்குள் புகுந்த யானைக் கூட்டம் விளை பயிா்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றது.

போ்ணாம்பட்டு வனச்சரகத்தில் பத்தரப்பல்லி, சேராங்கல், எருக்கம்பட்டு, கோட்டையூா், அரவட்லா, ரங்கம்பேட்டை உள்ளிட்ட கிராமங்கள் வன எல்லையில் அமைந்துள்ளன. கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் யானைகள் கூட்டமாக இந்தக் கிராமங்களுக்குள் புகுந்து விளைபயிா்களை சேதப்படுத்தி விட்டுச் செல்கின்றன.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு ஒரு குட்டியுடன் 4 யானைகள் கூட்டமாக வந்து சேராங்கல்லைச் சோ்ந்த மொகிலய்யா நிலத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை முறித்து, சேதப்படுத்தியுள்ளன.

அருகில் உள்ள கிருஷ்ணமூா்த்தி நிலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிரை மிதித்து சேதப்படுத்தியுள்ளன.

தகவலின் பேரில் வனவா் இளையராஜா தலைமையில் கிராம மக்கள் அங்கு சென்று பட்டாசு வெடித்து யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

SCROLL FOR NEXT