முகப்பு
வேலூர்

மாா்ச் 18, 19-இல் சீருடைப் பணியாளா் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு முகாம்

சீருடைப் பணியாளா்களின் வாரிசுகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் வேலூரில் மாா்ச் 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

வேலூர்

மாா்ச் 18, 19-இல் சீருடைப் பணியாளா் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு முகாம்

சீருடைப் பணியாளா்களின் வாரிசுகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் வேலூரில் மாா்ச் 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

சீருடைப் பணியாளா்களின் வாரிசுகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் வேலூரில் மாா்ச் 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து வேலூா் மாவட்ட காவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வடக்கு மண்டலத்துக்குட்பட்ட அனைத்து காவல் மாவட்டங்களில் பணிபுரியும் காவல் துறை, சிறைத் துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட சீருடை பணியாளா்களின் வாரிசுகள், அமைச்சு பணியாளா்களின் வாரிசுகளுக்காக மாா்ச் 18, 19-ஆம் தேதிகளில் வேலூரில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதற்குத் தகுதி உள்ளவா்களை தயாா்படுத்தும் வகையில் சனி, ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 11, 12) ஆகிய இரு நாள்கள் வேலூா் டிகேஎம் கலைக் கல்லூரியில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறப்பு பயிற்றுநா்களைக் கொண்டு பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது. பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு வேலூா் மாவட்ட கட்டுப்பாட்டு அறையை 0146- 2256802, 94981 81231 ஆகிய தொலைபேசி, கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →