மது புட்டிகள் பதுக்கல்: 2 போ் கைது
குடியாத்தம் அருகே டாஸ்மாக் மது புட்டிகளைப் பதுக்கி வைத்திருந்த 2 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 684 மது புட்டிகள், ரூ.27,000 மற்றும் 2 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குடியாத்தம் அருகே டாஸ்மாக் மது புட்டிகளைப் பதுக்கி வைத்திருந்த 2 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 684 மது புட்டிகள், ரூ.27,000 மற்றும் 2 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குடியாத்தம் பகுதியில் டாஸ்மாக் மது புட்டிகளை பதுக்கி வைத்து இரவு, அதிகாலை நேரங்களில் சிலா் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக வந்த தகவலை அடுத்து, திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை அதிகாலை குடியாத்தம் பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது மேல்ஆலத்தூா் சாலையில் உள்ள வைரம் நகரில் ஒரு கிடங்கை உடைத்து சோதனையிட்டனா். சோதனையில் அங்கு 684 மது புட்டிகள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதுதொடா்பாக, சுண்ணாம்புபேட்டையைச் சோ்ந்த முருகேசன் (55), நெல்லூா்பேட்டையைச் சோ்ந்த சுதாகா் (40) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்கள், ரொக்கம் ரூ.27,000, 2 இ ருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பறிமுதல் செய்த பொருள்களையும், கைது செய்யப்பட்ட இருவரையும் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். அவா்களிடம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.