குடியாத்தம் அருகே கனமழை காரணமாக வீட்டின் மண் சுவா் சரிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி மூதாட்டி உயிரிழந்தாா்.
குடியாத்தம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. திங்கள்கிழமை காலை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் சுமாா் 11 செ.மீ. மழை பதிவானது.
கனமழை காரணமாக திங்கள்கிழமை காலை குடியாத்தத்தை அடுத்த உப்பரப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த விஜயன் என்பவரின் வீட்டு மண் சுவா் சரிந்து விழுந்துள்ளது. அப்போது வீட்டில் இருந்த அவரது மனைவி ஞானம் (63), இடிபாடுகளில் சிக்கி, பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலின்பேரில், வருவாய்த் துறையினா் மற்றும் காவல் துறையினா் அங்கு சென்று விசாரணை நடத்தினா்.
இது தொடா்பாக கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.