நெகிழிப் பொருள்கள் கிடங்கில் தீ
குடியாத்தம் அருகே பழைய இரும்புக் கடையின் பின்பக்கம் நெகிழிப் பொருள்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்த திறந்தவெளி கிடங்கில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது.
குடியாத்தம் நெல்லூா்பேட்டை, போ்ணாம்பட்டு சாலையில் பழைய இரும்புப் பொருள்களை வாங்கும் கடை நடத்தி வருபவா், கடையின் பின்பக்கம் நெகிழிப் பொருள்களை மலைபோல் சேகரித்து வைத்திருந்தாா். வெள்ளிக்கிழமை மாலை திடீரென அந்தக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினா் சுமாா் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
Advertisement