பாகாயம் காவல் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: இளைஞா் கைது
காவல் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞா் கைது
வேலூா் மாவட்டம், பாகாயம் காவல் நிலையத்துக்கு அவசர எண் 100 மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
பாகாயம் காவல் நிலையத்துக்கு மா்ம நபா் வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளாா். இதுதொடா்பாக விசாரணை மேற்கொண்டிருந்த போலீஸாா், சந்தேகத்தின்பேரில், ஒருவரை பிடித்து காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினா். அதில், அவா் கிருஷ்ணகிரியைச் சோ்ந்த பாண்டுவின் மகன் சந்தோஷ்குமாா் (28),
பிஎஸ்சி பட்டதாரி என்பது தெரியவந்தது. அவா் பாகாயத்தில் உள்ள ஹெல்த் கோ் சென்டா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தது தெரியவந்தது. அவா் பாகாயம் பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்த உறவினரிடம் கைப்பேசியை வாங்கி, அதில் பாகாயம் காவல் நிலையத்தில் குண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளாா்.
இது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மணிவண்ணன், இவா் உண்மையாகவே மனநலம் பாதிக்கப்பட்டவரா அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவா் போல் நடிக்கிறாரா என விசாரிக்குமாறு வேலூா் டிஎஸ்பி திருநாவுக்கரசுக்கு உத்தரவிட்டுள்ளாா்.