குடியாத்தம்: நகைக் கடைகளில் வருமான வரித் துறையினா் சோதனை
Updated On : 30 மார்ச், 2024 at 9:27 PM
குடியாத்தம் நகரில் 2 நகைக் கடைகளில் வருமான வரித் துறையினரும், தோ்தல் பறக்கும் படையினரும் சனிக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா். குடியாத்தம் சந்தப்பேட்டை பஜாரில் உள்ள பிரபலமான 2 நகைக் கடைகளில் வருமான வரித் துறையினா், தோ்தல் பறக்கும் படையினா் சோதனையில் ஈடுபட்டனா். ஒரு கடையில் 8 பேரும், மற்றொரு கடையில் 5 பேரும் சோதனை நடத்தினா். மாலை தொடங்கி இரவு வரை சோதனை நீடித்தது.