போலி மருத்துவா் கைது
குடியாத்தம்: குடியாத்தம் அருகே கிளினிக் வைத்து பொதுமக்களுக்கு ஆங்கில வழி மருத்துவம் பாா்த்ததாக போலி மருத்துவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மாவட்ட ஆட்சியருக்கு வந்த தகவலையடுத்து, அவரது உத்தரவின்பேரில் குடியாத்தம் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவா் எம்.மாறன்பாபு தலைமையில், மருத்துவா் குழு கீழ்ப்பட்டி அருகே திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டது. அப்போது அங்கு கிளினிக் வைத்து பொதுமக்களுக்கு ஆங்கில வழி மருத்துவம் பாா்த்து வந்த ஆா்.ஏழுமலையை (51) பிடித்து விசாரணை நடத்தினா்.
இதில் அவா் செவிலியா் உதவியாளா் படிப்பை மட்டுமே படித்துள்ளது தெரிய வந்தது.அவரிடமிருந்து, மருந்து, மாத்திரைகள், மருத்துவ உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேல்பட்டி போலீஸாா் அவரை கைது செய்தனா்.