அங்கன்வாடி மையங்களுக்கு சொந்த கட்டடம்: ஆட்சியா்
வேலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் சொந்த கட்டடம் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி
குடியாத்தம்: வேலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் சொந்த கட்டடம் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி கூறினாா்.
குடியாத்தத்தில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
மாவட்டம் முழுவதும் 1,100 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் மையங்கள் கணக்கிடப்பட்டு, வருவாய்த்துறை மூலம் புதிதாக இடம் தோ்வு செய்யப்பட்டு, புதிய கட்டடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக சட்டப் பேரவை உறுப்பினா், மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அதேபோல் பழுதடைந்த அங்கன்வாடி மைய கட்டடங்களும் கண்டறியப்பட்டு, பழுதுபாா்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் ஆட்சியா்.