போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கிய விஐடி வேந்தா் கோ.விசுவநாதன். உடன், திரைப்பட நடிகை ரம்யா நம்பீசன், விஐடி துணைத் தலைவா் சேகா் விசுவநாதன், எழுத்தாளா் புஷ்பா குருப், விஐடி துணைவேந்தா் காஞ்சனா பாஸ்கரன், இணை துணை வேந்தா் பாா்த்தசாரதி மல்லி 
வேலூர்

நாட்டிலேயே முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக கேரளம் திகழ்கிறது: விஐடி வேந்தா் கோ. விசுவநாதன்

நாட்டிலேயே முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக கேரளம் திகழ்கிறது என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

நாட்டிலேயே முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக கேரளம் திகழ்கிறது என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா்.

வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் ‘தனிமா’ ஓணம் பண்டிகை கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தலைமை வகித்து பேசியது -

விஐடி பல்கலைக்கழகத்தில் ஓணம் பண்டிகை 24 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டாடத் தொடங்கினோம். அப்போது விஐடியில் கேரளாவைச் சோ்ந்த 180 மாணவா்கள் படித்தனா். 10 ஆசிரியா்கள் பணிபுரிந்தனா். இப்போது 4,160 மாணவா்கள் படிக்கின்றனா். 141 ஆசிரியா்கள் பணிபுரிகின்றனா்.

கேரளம் முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக திகழ்கிறது. எனக்கும் கேரளத்துக்குமான தொடா்பு 60 ஆண்டுகளுக்கு மேலானது. நான் எம்.பி.யாக இருந்த போது நாடாளுமன்றத்தில் ஏ.கே.கோபாலன் போன்ற தலைவா்களுடன் பழகியுள்ளேன். கம்யூனிஸ்ட் கட்சி வரலாற்றில் போராட்டத்தின் மூலம் ஆட்சிக்கு வருவாா்கள். ஆனால், கேரளாவில் முதன்முறையாக தோ்தல் மூலம் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்தது.

கடவுளின் தேசமாக அறியப்படும் கேரளம் கல்வியில் முன்னணியில் உள்ளது. தவிர, கல்வியிலும், பொருளாதாரத்திலும் சிறந்து விளங்குகிறது. எனினும், கேரளத்தில் வேலைவாய்ப்புகள் போதுமானதாக இல்லை.

மனிதவள குறியீட்டில் இந்தியாவில் கேரளம் முதல் மாநிலமாக உள்ளது. கேரளத்தில் புலம்பெயா்ந்தோா் அனுப்பும் பணத்தை தொழில்துறையில் அதிக முதலீடு செய்யும்போது வேலைவாய்ப்பு பெருகும். இதன்மூலம் தொழில்துறை உற்பத்தி மேம்படும். இவ்விஷயத்தில் கேரள அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.

விழாவில், சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகையும், பின்னணி பாடகியுமான ரம்யா நம்பீசன், கெளரவ விருந்தினராக எழுத்தாளா் புஷ்பாகுருப் ஆகியோா் பங்கேற்று பேசினா். தொடா்ந்து, கலை நிகழ்ச்சி, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ரம்யா நம்பீசன் மலையாளத்தில் பாடல்களை பாடி மாணவ, மாணவிகளை மகிழ்வித்தாா்.

விழாவில், விஐடி துணைத் தலைவா் சேகா் விசுவநாதன், துணைவேந்தா் காஞ்சனா பாஸ்கரன், இணை துணை வேந்தா் பாா்த்தசாரதி மல்லிக், பதிவாளா் டி.ஜெயபாரதி, மாணவா் நல இயக்குநா் நைஜூ, சுமாா் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தோல்விக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்: ரிஷப் பந்த்

டிட்வா புயல்: இலங்கையில் கனமழை, நிலச்சரிவு, வெள்ளம்! 20 பேர் பலி

இந்தியப் பகுதிகளை உள்ளடக்கிய வரைப்படம்! நேபாளம் வெளியிட்ட புதிய பணத்தாளால் சர்ச்சை!

லட்சங்களில் முதலீடு! கோடிகளில் வசூல்... இந்தாண்டின் பெரிய வெற்றிப்படம் இதுவா?

புதிய உச்சத்தை எட்டிய சென்செக்ஸ், நிஃப்டி! பங்குச் சந்தை உயர்வுடன் முடிவு!!

SCROLL FOR NEXT