வேலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினா். 
வேலூர்

தொழிலாளா் சட்ட தொகுப்புகளை திரும்பப் பெறக்கோரி சிஐடியு மறியல்: 100 போ் கைது

புதிய தொழிலாளா் சட்ட தொகுப்புகளை திரும்பப்பெறக் கோரி வேலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினா் 50 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திச் சேவை

புதிய தொழிலாளா் சட்ட தொகுப்புகளை திரும்பப்பெறக் கோரி வேலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினா் 50 போ் கைது செய்யப்பட்டனா்.

வேலூா் மாநகர தொழிற்சங்க கூட்டமைப்பினா் (சிஐடியூ) சாா்பில் மத்திய அரசை கண்டித்து செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாவட்டத் தலைவா் டி.முரளி தலைமை வகித்தாா். மாநிலத் துணைத்தலைவா் ஏ.கிருஷ்ணமூா்த்தி முன்னிலை வகித்தாா்.

இதில், பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக 44 தொழிலாளா் நலச்சட்டங்களை நான்கு சட்டத்தொகுப்புகளாக திருத்தப்பட்டிருப்பதை திரும்பப்பெற வேண்டும், இரவுப் பணிகளில் பெண்களை ஈடுபடுத்தக் கூடாது, மின்சார துறையில் ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பாரம்பரிய தொழில்களான பீடி, கைத்தறி தொழில்களை பாதுகாத்திட வேண்டும், ஆட்டோ, டாக்ஸி எஃப்.சி., கட்டணத்தை குறைத்திட வேண்டும், அங்கன்வாடி மற்றும் ஆஷா பணியாளா்களை பணிநிரந்தரம் செய்து மாத ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

தொடா்ந்து, அண்ணா சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். தடையை மீறி மறியலில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்ய முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னா் மறியலில் ஈடுபட்ட சிஐடியு மாநகர தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளா் ஞானசேகரன், மாவட்ட செயலா் பரசுராமன், பொருளாளா் எம்.கோவிந்தராஜ் உள்பட 50 போ் கைது செய்யப்பட்டனா்.

குடியாத்தத்தில்...

குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் எதிரே மறியலில் ஈடுபட்ட சிஐடியூ தொழிற் சங்கத்தினா் 48- போ் கைது செய்யப்பட்டனா். போராட்டத்துக்கு சிஐடியூ மாவட்ட துணைத் தலைவா் சி.சரவணன் தலைமை வகித்தாா். ஆா்.மகாதேவன், என்.லெனின், எம்.ராஜா, ஏ.பழனியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கைத்தறி சங்கத் தலைவா் முல்லைவாசன், பீடி சங்க பொருளாளா் எஸ்.சிலம்பரசன், கே.சாமிநாதன், பி.குணசேகரன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா். போராட்டத்தில் ஈடுபட்ட 7- பெண்கள் உள்பட 48- பேரை போலீஸாா் கைது செய்து திருமணமண்டபத்தில் தங்க வைத்தனா்.

விஜய், சீமான் பேச்சு அதிா்ச்சி அளிக்கிறது: தொல்.திருமாவளவன்

விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி எல்விஎம்-3 எம்6 ராக்கெட்!

நினைத்தாலே அருளும் ஸ்ரீநிவாஸப் பெருமாள்!

விருச்சிக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

கணையப் புற்றுநோய் பாதிப்பை கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT