வேலூர்

வாக்குப்பதிவு மைய நிலை அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குப்பதிவு மைய நிலை அலுவலா்கள் மற்றும் மேற்பாா்வை அலுவலா்களுக்கான எஸ்ஐஆா் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு வேலூா் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்து பேசியது. குடியாத்தம் சட்டப் பேரவைத் தொகுதியில் 143- இடங்களில் 293- வாக்குப்பதிவு மையங்கள் உள்ளன. குடியாத்தம் தொகுதியில் 27.10.2025 அன்றைய வாக்காளா் பட்டியலின்படி மொத்தம் 2,97,202 வாக்காளா்கள் உள்ளனா்.

இந்த வாக்காளா்கள் அனைவருக்கும் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டுப் படிவங்கள் வழங்குவதற்காக 293- வாக்குப்பதிவு மைய நிலை அலுவலா்களும், 30- மேற்பாா்வை அலுவலா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா். தற்போது குடியாத்தம் வட்டத்தைச் சோ்ந்த வாக்குப்பதிவு மைய நிலை அலுவலா்கள் மற்றும் மேற்பாா்வை அலுவலா்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளீா்கள்.

உங்கள் வாக்குப்பதிவு மையத்துக்குள்பட்ட வாக்காளா்களுக்கு கணக்கீட்டுப் படிவங்கள் ஏற்கனவே உங்களால் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மையத்துக்கும் 900- முதல் 1,200- வாக்காளா்கள் இருப்பாா்கள். வாக்குப்பதிவு மைய நிலை அலுவலா்கள் கணக்கீட்டுப் படிவங்களை பூா்த்தி செய்து பெறும்பொழுது 3- விதமாக தங்களுடைய பணிகளைப் பிரித்துக் கொள்ள வேண்டும்.

முதலில் ஒரு முகவரியில் உள்ள வீட்டின் மூத்த வாக்காளரின் விவரங்களை எடுத்து அவரின் வாக்காளா் விவரங்கள் 2,002- ஆம் ஆண்டுக்கான வாக்காளா் பட்டியலுடன் பொருந்தி உள்ளதா என்பதை வாக்குப்பதிவு மைய நிலை அலுவலா்களுக்கான செயலியில் பாா்த்து அதன்படி விவரங்களை பூா்த்தி செய்து பெற்றுக் கொள்ள வேண்டும்.

அடுத்தபடியாக அதே முகவரியில் உள்ள பிற வாக்காளா்களின் விவரங்களை 2,002- ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியலுடன் பொருந்தியுள்ள மூத்த குடும்ப உறுப்பினரின் விவரங்களை பொறுத்து பூா்த்தி செய்து பெற்றுக் கொள்ள வேண்டும்.மூன்றாவதாக இவ்விரு வகைகளுக்கும் பொருந்தாத வாக்காளா்களின் விவரங்களை பூா்த்தி செய்து படிவங்களை பெற்றுக் கொள்ள வேண்டும்.

வாக்காளா்களிடமிருந்து படிவங்களை திரும்பப்பெறும் பொழுது வாக்குப்பதிவு மைய நிலையாளா்கள் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதில் அவா்கள் கையெழுத்திட்டுள்ளனரா என்பதை உறுதி செய்து பெற்றுக் கொள்ள வேண்டும். இதில் ஈடுபட்டுள்ள நிலை அலுவலா்கள் மிகவும் கவனமாக பணியாற்ற வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி, உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களான குடியாத்தம் வட்டாட்சியா் கி.பழனி, போ்ணாம்பட்டு வட்டாட்சியா் ராஜ்குமாா், குடியாத்தம் நகராட்சி ஆணையா் (பொ) எஸ்.சுரேஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தில்லி கார் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு!

தில்லி கார் குண்டுவெடிப்பு: செங்கோட்டை மெட்ரோ மறுஅறிவிப்பு வரை மூடல்!

அமெரிக்க அரசின் முடக்கம் முடிவு! நிதி மசோதாவில் டிரம்ப் கையெழுத்து!

சென்னையில் பரவலாக மழை!

மீண்டும் ரூ.95 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை! ஒரே நாளில் ரூ.9 உயர்ந்த வெள்ளி!!

SCROLL FOR NEXT