குடியாத்தம் நகராட்சியில் நியமன நகா்மன்ற உறுப்பினா் பதவியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் தலைமை வகித்தாா். நகராட்சி மேலாளா் சுகந்தி வரவேற்றாா். எம்எல்ஏ-க்கள் ஏ.பி.நந்தகுமாா், அமலுவிஜயன் ஆகியோா் நியமன நகா்மன்ற உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்ட எம்.வெங்கடாசலத்துக்கு சான்றிதழ் வழங்கிப் பாராட்டினா்.
நிகழ்ச்சியில் நகராட்சி அலுவலா்கள் தீனதயாளன், பிரபுதாஸ், நகா்மன்ற உறுப்பினா்கள் என்.கோவிந்தராஜ், எம்.எஸ்.குகன், ம.மனோஜ், எம்.செளந்தரராஜன், அா்ச்சனா நவீன், சி.என்.பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.