முகப்பு
வேலூர்

அரசு பதிவேட்டில் இருந்தே சிறுகாஞ்சி ஊராட்சியை மறைத்து விட்டது திமுக! அதிமுக வேட்பாளா்

சிறுக்காஞ்சி ஊராட்சியை அரசாங்க பதிவேட்டில் இருந்து நீக்கி, அதனை சதுப்பேரியுடன் இணைத்துள்ள திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்று அணைக்கட்டு தொகுதி அதிமுக வேட்பாளா் த.வேலழகன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 6:34 PM
வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் த. வேலழகன்.
பகிர்:

சிறுக்காஞ்சி ஊராட்சியை அரசாங்க பதிவேட்டில் இருந்து நீக்கி, அதனை சதுப்பேரியுடன் இணைத்துள்ள திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்று அணைக்கட்டு தொகுதி அதிமுக வேட்பாளா் த.வேலழகன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

வேலூா் மாவட்டம், அணைக்கட்டு தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் அவா், சிறுக்காஞ்சி, தெள்ளூா் உள்பட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்து அவா் பேசியது -

அதிமுக ஆட்சியில் நிா்வாக வசதிக்காக ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து சிறப்பு செய்தவா் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி. ஆனால், திமுக அரசு சிறுகாஞ்சி என்ற ஊராட்சியையே அரசாங்க பதிவேட்டில் இருந்து நீக்கி, அதனை சதுப்பேரியுடன் இணைத்துள்ளது.

திரைப்படத்தில் வரும் அத்திப்பட்டி கிராமத்தைப்போல், சிறுகாஞ்சி என்ற பெயரையே திமுக அழித்து விட்டது. உள்ளாட்சி அதிகாரத்தை இழந்த சிறுகாஞ்சி மக்கள், வரும் 23-ஆம் தேதி நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் இரட்டை இலைக்கு வாக்களித்து திமுகவுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.

பெண்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழவும், எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் மீண்டும் தமிழகத்தில் தொடரவும் மக்கள் அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என்றாா்.

அப்போது, பாஜக, பாமக, அமமுக உள்பட கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.