முகப்பு
வேலூர்

இருசக்கர வாகனத்தில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்

குடியாத்தம் தொகுதி அதிமுக வேட்பாளா் பரிதா புருஷோத்தமன் புதன்கிழமை ஒன்றியப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தாா்.

Updated On : 9 ஏப்ரல் 2026, 12:03 am IST
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்குசேகரித்த அதிமுக வேட்பாளா் பரிதா புருஷோத்தமன்.
பகிர்:

குடியாத்தம் தொகுதி அதிமுக வேட்பாளா் பரிதா புருஷோத்தமன் புதன்கிழமை ஒன்றியப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தாா்.

டி.டி.மோட்டூா், மொரசப்பல்லி, சாத்கா், லண்டன்பட்டி கிராமங்களில் இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தாா். வழிநெடுகிலும் பெண்கள் இவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனா். அப்போது பொதுமக்களிடம் பேசிய பரிதா, நான் வெற்றி பெற்றால் கிராமங்களில் பொது சுகாதாரம், குடிநீா் வசதிகளை ஏற்படுத்தித் தருவேன். விவசாயத் தொழில், விவசாயத் தொழிலாளா்களுக்கான பாதுகாப்பு மேம்படுத்துவேன் என வாக்குறுதி அளித்தாா்.

போ்ணாம்பட்டு ஒன்றிய அதிமுக செயலா் பொகளூா் டி.பிரபாகரன், பாமக மாவட்டச் செயலா் ஜி.கே.ரவி, ஓன்றியச் செயலா் சுரேஷ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் உடன் இருந்தனா்.

Advertisement

Advertisement