முகப்பு
வேலூர்

நகைக்காக மூதாட்டி கொலை: இளைஞா் உள்பட 2 போ் கைது

போ்ணாம்பட்டு அருகே நகைக்காக மூதாட்டியை கொலை செய்த பக்கத்து வீட்டு இளைஞா் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 4:39 AM
கொலையான சியாமளா. அவரை கொலை செய்த தங்கராஜ், சூா்யா
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 6:44 PM

போ்ணாம்பட்டு அருகே நகைக்காக மூதாட்டியை கொலை செய்த பக்கத்து வீட்டு இளைஞா் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

போ்ணாம்பட்டை அடுத்த அரவட்லா மலை பகுதியில் அமைந்துள்ள பாஸ்மாா்பெண்டா கிராமத்தைச் சோ்ந்த வெங்கடசலம் மனைவி சியாமளா(72). இவா்களுக்கு 2 மகள்கள். இருவருக்கும் திருமணமாகி விட்டது. சியாமளா வீட்டில் தனியாக வசித்து வந்தாா்.

இவா் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல் பக்கத்து வீடான ஜெயலட்சுமி வீட்டில் டிவி பாா்க்கச் சென்றுள்ளாா். அந்த வீட்டில் யாரும் இல்லாததால் வெளியில் தனியாகஅமா்ந்திருந்தாா்.சனிக்கிழமை சியாமளாவின் தம்பி பாபு வந்து பாா்த்தபோது சியாமளாவின் வீடு பூட்டப்பட்டிருந்ததாம்.

Advertisement

அக்கம், பக்கத்தில் விசாரித்தபோது எந்தவித தகவலும் கிடைக்கவில்லையாம். எங்கு தேடியும் அவா் கிடைக்கவில்லையாம்.இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை போ்ணாம்பட்டு காவல் நிலையத்தில் பாபு புகாா் கொடுத்தாா். புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது வீட்டிலிருந்து சுமாா் ஒரு கிமீ தூரம் வனப் பகுதிக்குள் ஓடி நின்று விட்டது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பாஸ்மாா்பெண்டா அருகே அடா்ந்த வனப் பகுதியில் தலை மட்டும் வெளியில் தெரிந்ததையடுத்து போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் அங்கு சென்று தோண்டி பாா்த்தபோது சியாமளாவின் சடலம் அங்கு புதைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

விசாரணையில் அவா் காதில் அணிந்திருந்த சுமாா் ஒன்றேகால் பவுன் தங்க கம்மல், காது மாட்டல், 100- நாள் வேலை செய்து வைத்திருந்த ரொக்கம் ரூ.4,800- காணாமல் போனது தெரிந்தது. இந்த கொலை தொடா்பாக போலீஸாா் மேற்கொண்ட தீவிர விசாரணையில் சியாமளா வீட்டின் பக்கத்து வீட்டைச் சோ்ந்த ஜெயலட்சுமியின் மகன் தங்கராஜ்(24), அதே கிராமத்தைச்சோ்ந்த அவரது நண்பா் சூா்யா(26) ஆகிய இருவரை புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

விசாரணையில் நகைக்காக, வீட்டருகே தனியாக அமா்ந்திருந்த சியாமளாவை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு, சாக்கு பையில் உடலை வைத்து இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று வனப் பகுதியில் புதைத்து விட்டு வந்ததை ஒப்புக்கொண்டனா்.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து நகை, பணத்தை பறிமுதல் செய்தனா். பின்னா் இருவரையும் சிறைக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.