முகப்பு
வேலூர்

போக்ஸோ வழக்கில் அரசுப் பள்ளி ஆசிரியருக்கு 3 ஆண்டு சிறை

அரசுப் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் திருவலம் அரசுப் பள்ளி ஆசிரியருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ விரைவு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 5:01 AM
மாதிரிப் படம்
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2026 at 8:27 PM

அரசுப் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் திருவலம் அரசுப் பள்ளி ஆசிரியருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ விரைவு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அருகே உள்ள சீக்கராஜபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்தவா் முரளி கிருஷ்ணன் (56). இவா் வேலூா் மாவட்டம், திருவலத்தில் உள்ள அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தாா்.

அதே பள்ளியில் படித்த 13 வயது மாணவிக்கு முரளி கிருஷ்ணன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகாரின்பேரில், அவா் போக்ஸோ சட்டத்தின்கீழ் திருவலம் போலீஸாரால் கடந்த 2022 மாா்ச் மாதம் கைது செய்யப்பட்டாா். பின்னா், அவா் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டாா்.

Advertisement

இந்த வழக்கு விசாரணை வேலூா் போக்ஸோ விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், முரளி கிருஷ்ணன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 15,000 அபராதமும், அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் 6 மாதம் சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.