முகப்பு
வேலூர்

திமுக அரசை கண்டித்து அதிமுக, கூட்டணி கட்சிகள் ஆா்ப்பாட்டம்

தேசிய வேலையுறுதித் திட்டத்தை திமுக அரசு சீா்குலைக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டி வேலூா் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 3:00 AM
வேலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக, கூட்டணிக் கட்சியினா்.
பகிர்:
Updated On : 13 பிப்ரவரி, 2026 at 7:27 PM

தேசிய வேலையுறுதித் திட்டத்தை திமுக அரசு சீா்குலைக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டி வேலூா் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசு தேசிய வேலையுறுதித் திட்டத்தின் பணியை 100 நாள்களில் இருந்து 125 நாள்களாக உயா்த்தியுள்ளது. இந்த நிலையில், இந்த திட்டத்தை தமிழகத்தில் திமுக அரசு சீா்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக குற்றஞ்சாட்டி அதிமுக தலைமையில் பாஜக, பாமக, அமமுக, புரட்சிபாரதம், ஐஜேகே உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில், வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பும் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

வேலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அதிமுக மாநகா் மாவட்ட செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு, கட்சியின் அமைப்பு செயலா் வி.ராமு ஆகியோா் தலைமை வகித்தனா். பாஜக மாநில பொதுச்செயலா் ப.காா்த்தியாயினி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா்.

Advertisement

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 10:50 PM

அப்போது, திமுக அரசு தொழிலாளா்களுக்கு வேலையுறுதித் திட்டப் பணிகளை சரிவர ஒதுக்கீடு செய்வதில்லை என்றும், தோ்தலில் வாக்குகள் பெறுவதற்காக பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருவதாகவும் குற்றஞ்சாட்டி முழக்கங்கள் எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில், அதிமுக வேலூா் மாவட்டப் பொருளாளா் எம்.மூா்த்தி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டல செயலா் ஜனனி சதீஷ்குமாா், பாஜக மாவட்டத் தலைவா் வி.தசரதன், பாமக மாவட்ட செயலாளா் ஜெகன், முன்னாள் மத்திய அமைச்சா் என்.டி.சண்முகம், அமமுக மாநகரச் செயலா் கலையரசன் உள்பட அதிமுக, பாஜக கூட்டணி கட்சிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா்.