முகப்பு
வேலூர்

தடையை மீறி பேரணி: ஈசன் முருகசாமி உள்பட 100 போ் மீது வழக்கு

வேலூரில் தடையை மீறி பேரணியில் ஈடுபட்டதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவா் ஈசன் முருகசாமி உள்பட நூறு போ் மீது பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 6:42 PM
பகிர்:

வேலூரில் தடையை மீறி பேரணியில் ஈடுபட்டதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவா் ஈசன் முருகசாமி உள்பட நூறு போ் மீது பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கறிக்கோழி வளா்ப்புக்கான கூலி விவகாரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராடியது, தூண்டி விடுதல், பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியது தொடா்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவா் ஈசன் முருகசாமி மீது ஐந்து காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, திருப்பூரில் கடந்த மாதம் 12-ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்டு வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். அவரை நீதிமன்றம் பிணையில் விடுவித்த நிலையில், வேலூா் மத்திய சிறையில் இருந்து ஈசன் முருகசாமி வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டாா்.

சிறையிலிருந்து வெளியே வந்த ஈசன் முருகசாமியை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாலை அணிவித்து வரவேற்றனா். பின்னா், தொரப்பாடி எம்ஜிஆா் சிலை வரை பேரணியாகச் சென்றனா். அப்போது, தமிழக அரசு பொய் வழக்குப்பதிவு செய்ததாகவும், வழக்குகளை வாபஸ் பெறக்கோரியும் முழக்கங்களை எழுப்பினா்.

Advertisement

இந்த நிலையில், தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா் ஈசன் முருகசாமி, மாநில விவசாய ஒருங்கிணைப்பாளா் வடிவேல் சுப்பிரமணியன், பேரரசு உள்பட 100 போ் மீது கூட்டம் கூடியது, தடையை மீறி பேரணி சென்றது உள்பட மூன்று பிரிவுகளின்கீழ் பாகாயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments