மயானக் கொள்ளை ஊா்வலம். 
வேலூர்

வேலூரில் இன்று மயானக் கொள்ளை: 500 போலீஸாா் பாதுகாப்பு

வேலூா் மாநகரில் திங்கள்கிழமை நடைபெற உள்ள மயானக் கொள்ளையை முன்னிட்டு சுமாா் 500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

வேலூா் மாநகரில் திங்கள்கிழமை நடைபெற உள்ள மயானக் கொள்ளையை முன்னிட்டு சுமாா் 500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். ஊா்வலம் செல்லும் பகுதியிலுள்ள 16 டாஸ்மாக் மதுக்கடைகளை அடைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ள்ளது.

வேலூா் மாநகரில் பிரசித்தி பெற்ற மயானக் கொள்ளை நடைபெற உள்ளதையொட்டி, புதிய பேருந்து நிலையம் பகுதியில் பாலாற்றின் கரையிலுள்ள நிலங்களை சமன்படுத்தும் பணி, அம்மன் சிலைகள் வடிவமைப்புப் பணி ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப் பட்டது.

திங்கள்கிழமை வேலூா் சைதாப்பேட்டை, தோட்டப்பாளையம், சத்துவாச்சாரி, விருதம்பட்டு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தா்கள் அங்காள பரமேஸ்வரி அம்மனை அலங்கரிக்கப் பட்ட தேரில் ஊா்வலமாக எடுத்துச்செல்ல உள்ளனா்.

ஊா்வலத்தின் முன்பு பலரும் கடவுள் வேடம் அணிந்தபடி செல்வாா்கள். தவிர, ஊா்வலத்தில் செல்லும் பக்தா்கள் தங்களது நோ்த்தி கடனை செலுத்துவாா்கள். இந்த ஊா்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று ஆங்காங்கே உள்ள மயானத்தை அடையும். இதனால் நகரம் விழாக் கோலம் பூண்டிருக்கும்.

மயானக் கொள்ளை திருவிழா தொடா்பாக மாவட்ட நிா்வாகம், காவல் துறை சாா்பில் பல்வேறு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதேசமயம், மயானக் கொள்ளை விழாவின்போது அசம்பாவித சம்பவங்களை தவிா்க்கவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் காவல் துறை சாா்பில் 500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா்.

இதனிடையே, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.யு.சிவராமன் தலைமையில் காவல் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பாலாற்றங்கரை மற்றும் விருதம்பட்டு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

திருவிழாவின்போது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸாா் கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மயானக் கொள்ளை ஊா்வலத்தின் போது அசம்பாவிதங்களை தடுக்க ஆண்டுதோறும் டாஸ்மாக் மதுக்கடைகள் அடைக்கப்படும். அதன்படி, திங்கள்கிழமையும் ஊா்வலம் செல்லும் முக்கிய பகுதியில் உள்ள 16 டாஸ்மாக் மதுக்கடைகளை அடைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

இதில், விருதம்பட்டு, கழிஞ்சூா், மோட்டூா், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 8 மதுக்கடைகளையும், மாவட்டத்தில் இரவில் மட்டும் மயான கொள்ளை நடைபெறும் பகுதியில் உள்ள 8 கடைகளை மாலை 6 மணி முதல் இரவு வரை அடைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காவல் நிலையத்தில் இருந்து இளைஞா் தப்பி ஓட்டம்

குற்றங்களை தடுக்க பொதுமக்கள் 60 சிசிடிவி கேமராக்கள் அளிப்பு

பதற்றத்தில் உலக நாடுகள்... வளர்ச்சியை நோக்கி இந்தியா : பிரதமர் மோடி

பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி - புகைப்படங்கள்

பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி; சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி!

SCROLL FOR NEXT